கூகுள் நிறுவனம் தடை செய்யப்பட்ட தரவுகளை நீக்க தவறி விட்டதாக கூறி ரஷியா வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
கூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு
பதிவு: நவம்பர் 25, 2020 13:05
கூகுள்
இணைய தேடலில் அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி பயனாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ரஷியாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து ரஷியாவின் தகவல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பயங்கரவாதம், ஆபாசம் மற்றும் தற்கொலையை தூண்டுவது உள்ளிட்ட ஆபத்தான தரவுகளை அகற்ற கூகுள் தவறிவிட்டது.
எனவே கூகுள் நிறுவனத்துக்கு எதிராக ரஷிய அரசு நிர்வாக நடவடிக்கைகளை துவங்கி உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது மட்டுமல்லாமல் 65 ஆயிரத்து 670 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 48 லட்சத்து 60 ஆயிரம்) அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
Related Tags :