தொழில்நுட்பம்
கூகுள் பிளே

இந்தியாவுக்கென பிரத்யேக ஆப் ஸ்டோர் உருவாக்க ஆப் டெவலப்பர்கள் கோரிக்கை

Published On 2020-10-03 07:10 GMT   |   Update On 2020-10-03 07:10 GMT
இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோருக்கு மாற்றாக தேசிய ஆப் ஸ்டோர் போன்ற தளத்தை உருவாக்க கோரிக்கை வலுத்து வருகிறது.


இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோருக்கு மாற்றாக தேசிய ஆப் ஸ்டோர் ஒன்றை உருவாக்க ஆப் டெவலப்பர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முன்னதாக பிளே ஸ்டோரில் கூகுளின் பில்லிங் சிஸ்டத்தை பயன்படுத்தாத செயலிகளுக்கு 30 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என கூகுள் அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து இந்திய ஆப் டெவலப்பர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தியாவுக்கென பிரத்யேக பிளே ஸ்டோரை உருவாக்க கோரிக்கை விடுக்க துவங்கி உள்ளனர்.



சில வாரங்களுக்கு முன் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டது. பின் ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற செயலிகளும் நீக்கப்பட்டன. இந்த செயலிகள் கூகுளின் விதிமுறைகளை மீறியதாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.

பேடிஎம் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விஜய் சங்கர் ஷர்மா கூகுள் பிளே சேவைக்கு மாற்றான தேசிய பிளே ஸ்டோர் உருவாக்குவதற்கான கோரிக்கை விடுக்கும் ஆப் டெவலப்பர்கள் மற்றும் தொழில்முனைவோர் குழுவிற்கு தலைமை வகிக்கிறார். 
Tags:    

Similar News