தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் 8டி

அந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகாது - ஒன்பிளஸ் அதிகாரி தகவல்

Published On 2020-09-30 07:29 GMT   |   Update On 2020-09-30 07:29 GMT
அந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு நிச்சயம் வெளியாகாது என ஒன்பிளஸ் அதிகாரி தெரிவித்து இருக்கிறது.


ஒன்பிளஸ் 8டி ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகாது என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஒன்பிளஸ் 8டி ப்ரோ மாடலை வெளியிடும் திட்டமில்லை என அவர் அறிவித்து இருக்கிறார்.

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஏற்கனவே பிரீமியம் பிளாக்ஷிப் மாடலாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு மற்றொரு ப்ரோ சீரிஸ் அப்கிரேடு செய்யும் திட்டம் ஏதும் இல்லை என பீட் லௌ தெரிவித்து இருக்கிறார். எனினும், ஒன்பிளஸ் 8டி மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு சீரிசில் புது மாடல் அறிமுகமாக இருப்பதை அவர் சூசகமாக தெரிவித்து உள்ளார்.



முன்னதாக ஒன்பிளஸ் நார்டு சீரிசில் புது மாடல் அறிமுகமாக இருப்பதை ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது. தற்சமயம் ப்ரோ சீரிஸ் அப்கிரேடு செய்யும் திட்டம் இல்லாததால், புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 8டி மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 8டி மாடல் துவக்க விலை 799 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 69 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News