தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-09-18 06:28 GMT   |   Update On 2020-09-18 06:28 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய ஆன்லைன் ஸ்டோர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சொந்தமாக ஆன்லைன் ஸ்டோரை செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கும் பிரீமியம் அனுபவம் புதிய ஆன்லைன் தளத்திலும் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஆன்லைன் ஆப்பிள் வல்லுநர்கள் பயனர்கள் எதிர்பார்க்கும் வகையில் மேக் சாதனங்களை கான்ஃபிகர் செய்ய உதவுவர். பயனர்கள் புதிய சாதனங்கள் பற்றிய சந்தேகங்கள், உதவி உள்ளிட்டவைகளை கேட்டறிந்து கொள்ள முடியும். துவக்கத்தில் இந்த சேவை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.



ஆன்லைன் ஸ்டோரில் பிரத்யேக நிதி சலுகை, மாணவர்களுக்கு சிறப்பு விலை, அக்சஸரீக்கள் மற்றும் ஆப்பிள் கேர் பிளஸ் உள்ளிட்டவைகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் செஷன்களை நடத்த ஆப்பிள் திட்டமிட்டு இருக்கிறது. இதில் புகைப்பட கலை மற்றும் மியூசிக் பிரிவுகளில் பிரத்யேக வகுப்புகளை வல்லுநர்கள் நடத்த இருக்கின்றனர்.   

ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆர்டர்களுக்கும் காண்டாக்ட்லெஸ் டெலிவரி செய்யப்படுகிறது. இதற்கான கட்டண முறைகள் - கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இஎம்ஐ, ரூபே, யுபிஐ, நெட் பேங்கிங் மற்றும் டெலிவரியின் போது கிரெடிட் கார்டு உள்ளிட்டவை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
Tags:    

Similar News