தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஐபோன் 12 மாடலில் சீன பயனர்கள் எதிர்பார்த்த அம்சம்

Published On 2020-08-10 07:20 GMT   |   Update On 2020-08-10 07:20 GMT
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் சீன பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த அம்சத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் சீன சந்தையில் பிரபலமாக இருக்கின்றன. சீன சந்தைக்கென ஆப்பிள் விசேஷ கவனம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 12 மாடலில் லோக்கல் நேவிகேஷன் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய மாடலில் பெய்டௌ நேவிகேஷன் சிஸ்டம் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.



இத்துடன் புதிய ஐபோன் சீரிசில் பெய்டௌ வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள ஐபோன் பயனர்கள் நீண்ட காலமாக பெய்டௌ வசதி இல்லாததற்கு கவலை தெரிவித்து வந்தனர். இதனால் புதிய மாடலில் சீன பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் ஐபோன் மாடல்களில் ஜிபிஎஸ் வசதி, குளோனேஸ், கலிலியோ மற்றும் கியூஇசட்எஸ்எஸ் போன்ற நேவிகேஷன் சிஸ்டம்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 200 நாடுகள் மற்றும் 10 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News