தொழில்நுட்பம்
ஆப்பிள்

இந்தியாவில் ஐபோன் ஆலை கட்டமைக்கும் புதிய நிறுவனம்

Published On 2020-07-20 06:47 GMT   |   Update On 2020-07-20 06:47 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஆலையை பெகட்ரான் நிறுவனம் கட்டமைக்க இருக்கிறது.
 

ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியாளர்களில் ஒருவரான பெகட்ரான் குழுமம், இந்தியாவில் தனது முதல் உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருக்கிறது. பல்வேறு பெரும் நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய துவங்கி இருக்கும் நிலையில், புதிய நிறுவனமாக பெகட்ரான் இணைந்துள்ளது. 

முன்னதாக ஜூன் மாத வாக்கில் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தங்களது பணிகளை துவங்க மத்திய அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலைகளை கட்டமைக்க ஆர்வம் செலுத்தி வருகின்றன. 



அந்த வரிசையில் பெகட்ரான் நிறுவனம் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்வதில் இரண்டாவது பெரும் நிறுவனமாக விளங்குகிறது. தாய்வான் நாட்டை சேர்ந்த பெகட்ரான் நிறுவனத்தின் 50 சதவீத வியாபாரம் ஐபோன் உற்பத்தியை சார்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சீனாவில் பெகட்ரான் ஆலைகள் இயங்கி வரும் நிலையில், தற்சமயம் இந்தியாவிலும் புதிய ஆலையை பெகட்ரான் கட்டமைக்க இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் சூழல் நிலவும் நிலையில், பெகட்ரான் நிறுவனத்தின் திடீர் முடிவு சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்துள்ளது.
Tags:    

Similar News