தொழில்நுட்பம்
ஐஒஎஸ் 13

டிஜிட்டல் கார் கீ அம்சம் வழங்கும் ஐஒஎஸ் 13.6 மற்றும் ஐபேட்ஒஎஸ் 13.6 வெளியீடு

Published On 2020-07-16 07:40 GMT   |   Update On 2020-07-16 07:40 GMT
ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 13.6 மற்றும் ஐபேட்ஒஎஸ் 13.6 இயங்குதளத்துக்கான அப்டேட்டினை வெளியிட்டு வருகிறது.
 

ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 13.6 மற்றும் ஐபேட்ஒஎஸ் 13.6 இயங்குதளத்தை வெளியிட்டு உள்ளது. புதிய ஐஒஎஸ் வெர்ஷன் ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் அதன்பின் வெளியான புதிய ஐபோன் மாடல்களில் டிஜிட்டல் கார் கீ அம்சம் மூலம் கார்களை அன்லாக், லாக் மற்றும் ஸ்டார்ட் போன்ற அம்சங்களை மேற்கொள்ள முடியும். 

தற்சமயம் ஆப்பிள் கார் கீஸ் அம்சம் பிஎம்டபிள்யூ நிறுவன மாடல்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் ஆப்பிள் நியூஸ் மற்றும் ஆப்பிள் நியூஸ் பிளஸ், அமெரிக்க பயனர்களுக்கு ஆடியோ ஸ்டோரி, அப்டேட்கள் தானாக டவுன்லோட் செய்யப்பட வேண்டுமா என்பதை தேர்வு செய்யும் வசதி உள்ளிட்டவை புதிய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது. 



ஹெல்த் ஆப் யுஐ சிம்ப்டம்ஸ் எனும் புதிய அம்சம் கொண்டிருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் காய்ச்சல், குளிர், தொண்டை கரகரப்பு, இருமல் வருவது போன்ற அறிகுறிகளை பதிவிட்டு அவற்றை மூன்றாம் தரப்பு செயலிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும். 

வாட்ச்ஒஎஸ் 6.2.8 வெர்ஷனிலும் டிஜிட்டல் கார் கீஸ் அம்சம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களில் செயல்படுத்து உள்ளது. இத்துடன் இசிஜி ஆப், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இதய துடிப்பில் மாற்றத்தை தெரியப்படுத்தும் நோட்டிஃபிகேஷன் பஹ்ரைன், பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்காவில் வழங்கப்படுகிறது. புதிய அப்டேட்கள் ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News