தொழில்நுட்பம்
வாட்ஸ்அப், வாட்ஸ்அப் வெப், டார்க் மோட், செயலி, ஆப்ஸ்

வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்

Published On 2020-07-04 06:24 GMT   |   Update On 2020-07-04 06:24 GMT
வாட்ஸ்அப் வெப் சேவையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.


வாட்ஸ்அப் வெப் சேவையில் ஒருவழியாக டார்க் மோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், வாட்ஸ்அப் வெப் தளத்தில் இதுவரை டார்க் மோட் வசதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதியை வழங்கி உள்ளது. முன்னதாக இந்த அம்சம் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. வாட்ஸ்அப் வெப் தளத்தில் உடனே டார்க் மோட் வசதியை பயன்படுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

இதற்கு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறந்து வாட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி கணினியில் வாட்ஸ்அப் வெப் வலைதளம் திறந்து அதிலுள்ள கியூ ஆர் கோடினை ஸ்மார்ட்போன் கொண்டு ஸ்கேன் செய்ய வேண்டும். 

கணினியில் வாட்ஸ்அப் வெப் தளம் திறந்ததும், செட்டிங்ஸ் பேனலில் தீம் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்ததும், தீம் ஆப்ஷனில் டார் பட்டனை க்ளிக் செய்து டார்க் மோட் தீமை செயல்படுத்தி கொள்ளலாம். 

வாட்ஸ்அப் வெப் பதிப்பில் டார்க் மோட் வசதி தவிர, வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், கியூ ஆர் கோட் மூலம் காண்டாக்ட்களை சேர்க்கும் வசதி, வீடியோ கால்களில் அதிகபட்சம் 8 பேருடன் உரையாடும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

வாட்ஸ்அப் செயிலியின் புதிய அம்சங்களில் வரும் வாரங்களில் பயனர்களுக்கு வழங்கப்படும் என வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
Tags:    

Similar News