தொழில்நுட்பம்
சாம்சங் டிவி

அடுத்த வாரம் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட் டிவி

Published On 2020-06-24 10:03 GMT   |   Update On 2020-06-24 10:07 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி சீரிஸ் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தி செரிஃப் 4கே கியூஎல்இடி டிவி மாடல்களை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய டிவி இன்பில்ட் என்எஃப்சி தொழில்நுட்பம் கொண்ட முதல் சாம்சங் டிவி ஆகும். இது ஸ்மார்ட்போன்களில் உள்ள தரவுகளை மிக எளிதில் டிவியில் ஒளிபரப்பும் திறன் கொண்டதாகும். இந்த அம்சத்தை இயக்க பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை டிவியின் மீது வைத்தாலே போதும்.

மேலும் தி செரிஃப் டிவி ஏர்பிளே 2 வசதி கொண்டிருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் வீடியோக்கள், மியூசிக், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ஆப்பிள் சாதனங்களில் இருந்து டிவியில் இயக்க முடியும். மேலும் இந்த டிவியை பயனர்கள் தங்களின் குரல் மூலம் இயக்க வசதியாக பிக்ஸ்பி மற்றும் அலெக்சா போன்ற சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டிவி 40 வாட் சேனல் ஸ்பீக்கர்களுடன் டால்பி டிஜிட்டல் பிளஸ் கொண்டிருக்கின்றன. இதில் உள்ள ஆக்டிவ் வாய்ஸ் ஆம்ப்ளிஃபையர் பயனர் அருகில் ஏற்படும் தொந்தரவளிக்கும் சத்தத்தை கண்டறிந்து, திரையில் வரும் குரல்களை மேலும் தெளிவாக மாற்றி வழங்குகிறது.

சாம்சங் தி செரிஃப் டிவி 43 இன்ச், 49 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 85 ஆயிரம் முதல் துவங்கலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News