தொழில்நுட்பம்
கேலக்ஸி ஏ21எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-06-17 17:30 IST   |   Update On 2020-06-17 17:30:00 IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 850 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

ஹாலோகிராஃபிக் 3D கிளாஸ்டிக் டிசைன் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.



சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்:

- 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் எக்சைனோஸ் 850 பிராசஸர்
- மாலி-G52
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம் 
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் சென்சார், f/ 2.4
- 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 5,000 எம்ஏஹெச் பேட்டரி
- 15W ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16499 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

Similar News