தொழில்நுட்பம்
ரூ. 300 விலையில் லோஷன் ஆர்டர் செய்தவருக்கு ரூ. 19 ஆயிரம் மதிப்புள்ள ஹெட்போன் அனுப்பி வைத்த அமேசான்
ரூ. 300 விலையுள்ள லோஷனை ஆர்டர் செய்த நபருக்கு அமேசான் நிறுவனம் ரூ. 19 ஆயிரம் மதிப்புள்ள ஹெட்போன்களை டெலிவரி செய்திருக்கிறது.
நாட்டில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் தொடர்ந்து அதிரித்து வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கில் பயனர்களுக்கு அடிக்கடி அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாகவே இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் புதிய உச்சத்தை தொடுகிறது.
அவ்வப்போது ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை முன்பதிவு செய்தவர்களுக்கு செல்போனுக்கு மாற்றாக செங்கல் வரும் சம்பவங்கள் நடைபெறுவது சர்ச்சையை ஏற்படுத்தி விடுகின்றது.
அந்த வகையில் அமேசான் தளத்தில் ரூ. 300 மதிப்புள்ள ஸ்கின் லோஷனை முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்கு அமேசான் தரப்பில் இருந்து ரூ. 19 ஆயிரம் மதிப்புள்ள போஸ் ஹெட்போன் டெலிவரி செய்யப்பட்டு விட்டது. தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ட்விட்டர் மூலம் அமேசானுக்கு பாதிக்கப்பட்ட கவுதம் என்ற வாடிக்கையாளர் தெரிவித்தார்.
எனினும், இது திரும்ப பெறும் வசதி இல்லை என அமேசான் தெரிவித்துள்ளது. கவுதம் பகிர்ந்ததை போன்று ஆன்லைன் ஷாப்பிங்கில் சந்தித்த அனுபவங்களை பலர் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.