தொழில்நுட்பம்
கேலக்ஸி நோட் 20 ரென்டர்

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா

Published On 2020-06-05 08:55 GMT   |   Update On 2020-06-05 08:55 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 பிளஸ் ஸ்மார்ட்போன் ரென்டர்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்சமயம் SM-N986U எனும் மாடல் நம்பர் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் ப்ளூடூத் தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி நோட் 20 பிளஸ் மாடலுக்கு மாற்றாக நோட் 20 அல்ட்ரா வெளியாகும் என தெரிகிறது.

முன்னதாக வெளியான தகவல்களின் படி N986U எனும் பெயரில் கேலக்ஸி நோட் 20 பிளஸ் ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் பெரிய கேமரா பம்ப், 108 எம்பி பிரைமரி கேமரா, 6.9 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்பட்டது.



முந்தைய ரென்டர்களின் படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, சிறிய பன்ச் ஹோல் ஸ்மார்ட்போனின் மத்தியில் பொருத்தப்படும் என கூறப்பட்டது. இத்துடன் மிக மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகின்றன. வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் எஸ் பென் வைப்பதற்கான ஸ்லாட் வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இது பார்க்க கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.

வெளியீட்டை பொருத்தவரை கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில், ஆன்லைனில் அறிமுகமாகும் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.
Tags:    

Similar News