தொழில்நுட்பம்
மோட்டோரோலா

இரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்

Published On 2020-05-28 05:25 GMT   |   Update On 2020-05-28 05:25 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
 


மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருப்பதை அந்நிறுவனம் தெரியப்படுத்தி இருக்கிறது. இதற்கென மோட்டோரோலா சிறு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி புதிய ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஃபாஸ்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கென மோட்டோரோலா விளம்பர வீடியோ ஒன்றை யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

மோட்டோரோலா மோட்டோ ஜி ஃபாஸ்ட் ஸ்மார்ட்போன் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் இது அதிவேகமாக இயங்குவதோடு, இதன் கேமரா தலைசிறந்த புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என வெளியான தெரியவந்துள்ளது.



இதுதவிர புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் குவால்காம் பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வீடியோவின் படி புதிய ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, பின்புறம் மூன்று பிரைமரி கேமரா சென்சார், எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி ஃபாஸ்ட் ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகி அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News