தொழில்நுட்பம்
ரெட்மி 8

ப்ளூடூத் தளத்தில் லீக் ஆன ரெட்மி 9 ஸ்மார்ட்போன்

Published On 2020-05-27 05:31 GMT   |   Update On 2020-05-27 05:31 GMT
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது.



சியோமியின் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் வெளியீடு தொடர்ந்து மர்மமாக இருக்கிறது. இந்நிலையில், புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 9 என்ற பெயரில் அறிமுகமாகும் என்றும் இது ஜூன் மாத வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.  

ப்ளூடூத் தள விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் மே 26 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 வழங்கப்படுகிறது. சற்றே வித்தியாசமான மாடல் நம்பர்களுடன் மொத்தம் ஐந்து ரெட்மி 9 மாடல்கள் உருவாகி வருகின்றன.



இவை M2004j19G மாடல் நம்பர் கொண்ட மாடல் அமெரிக்காவின் எஃப்சிசி க்ளியரன்ஸ் தளத்தில் லீக் ஆகியிருந்தது. இதுதவிர M2004J19I, M2004J19C, M2004J19PI, மற்றும் M2004J19AG மாடல் நம்பர்களில் ரெட்மி 9 வெர்ஷன்கள் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 4000 முதல் 5000 எம்ஏஹெச் பேட்டரி, இரு பிரைமரி கேமரா சென்சார்கள், ஒற்றை செல்ஃபி கேமரா வழங்கப்படுகறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படுகிறது.

தற்போதைய விவரங்களின் படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News