தொழில்நுட்பம்
ஐபோன் எஸ்இ

ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஐபோன்

Published On 2020-05-11 17:56 IST   |   Update On 2020-05-11 17:56:00 IST
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2020 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஆப்பிள் நிறுவனம் தனது விலை குறைந்த ஐபோன் மாடலை ரூ. 42,500 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மற்ற ஆப்பிள் சாதனங்களை விட இதன் விலை குறைவு தான். எனினும், இதன் விலை மீண்டும் குறைந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி புதிய ஐபோன் மாடலுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகையின் படி வாடிக்கையாளர்கள் ஐபோன் எஸ்இ மாடலை ரூ. 38,900 விலையில் வாங்கிட முடியும். ஹெச்டிஎஃப்சி கார்டு வைத்திருப்போர் இச்சலுகையை பெறலாம்.



அதன்படி ஹெச்டிஎஃப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துவோர் புதிய ஐபோன் எஸ்இ மாடலை வாங்கும் போது ரூ. 3600 வரை கேஷ்பேக் பெறலாம். அதன்படி ரூ. 42,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஐபோன் எஸ்இ 64 ஜிபி பேஸ் வேரியண்ட்டை வாடிக்கையாளர்கள் ரூ. 38,900 விலையில் வாங்கிட முடியும்.

இந்தியாவில் இன்னும் ஐபோன் எஸ்இ விற்பனை துவங்கப்படவில்லை. எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விற்பனையை உணர்த்தும் வகையில் டீசர் வெளியிடப்பட்டது. அந்த வகையில் இதன் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.

Similar News