தொழில்நுட்பம்
அமேசான் ஸ்கிரீன்ஷாட்

இந்தியாவில் மீண்டும் செயல்பட துவங்கிய ஆன்லைன் சந்தை

Published On 2020-05-05 12:14 IST   |   Update On 2020-05-05 12:15:00 IST
இந்தியா முழுக்க முடக்கப்பட்டு இருந்த ஆன்லைன் சந்தை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ஆன்லைன் சந்தை முடங்கியிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான முன்பதிவு மீண்டும் துவங்கி இருக்கிறது.

எனினும், இது ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு மட்டும் ஆன்லைன் தள நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய முடியும்.



அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் மற்றும் பேடிஎம் மால் போன்ற முன்னணி ஆன்லைன் வர்த்தக வலைதளங்களில் படிப்படியாக பணிகள் துவங்கியுள்ளன. இதனால் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் வசிப்போர் ஆன்லைன் தளங்களில் முன்பு இருந்ததை போன்று அனைத்துவிதமான பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடியும்.

ஆன்லைன் தளங்கள் மீண்டும் செயல்பட துவங்கி இருப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் சமூக இடைவெளியை சரியாக பின்பற்ற முடியும். மேலும் சிறு வியாபாரம் செய்வோரும் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்ய முன்வரும் பட்சத்தில், ஊரடங்கின் போதும் தொடர்ந்து வருவாய் ஈட்ட முடியும் என கூறப்படுகிறது.

Similar News