தொழில்நுட்பம்
கேலக்ஸி நோட் 10 சீரிஸ்

புதிய கேலக்ஸி நோட் சீரிஸ் வெளியீட்டில் மாற்றமில்லை

Published On 2020-04-10 07:18 GMT   |   Update On 2020-04-10 07:18 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றிய புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் அறிமுகம் தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீட்டில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது.

பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது நிகழ்வு திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றன. சாம்சங் தனது கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களை ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 



தி கொரியா ஹெரால்டு வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான அறிமுக நிகழ்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிமுக நிகழ்வில் மாற்றம் இருக்காது என்ற போதும், இது ஆன்லைன் மூலம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருந்தது. 

சமீபத்தில் கேலக்ஸி நோட் 20 பிளஸ் 5ஜி மாடல் கீக்பென்ச் தளத்தில் SM-N986U என்ற மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவது தெரியவந்தது. கேலக்ஸி நோட் 20 பிளஸ் 5ஜி மாடலில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News