தொழில்நுட்பம்
எல்ஜி ஸ்மார்ட்போன் வரைபடம்

புதிய வடிவமைப்பு, ரெயின்டிராப் கேமராவுடன் உருவாகும் எல்ஜி ஸ்மார்ட்போன்

Published On 2020-04-09 07:44 GMT   |   Update On 2020-04-09 07:44 GMT
எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய வடிவமைப்பு, ரெயின்டிராப் ரக கேமரா உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

எல்ஜி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலின் வரைபடங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. வரைபடங்களின் படி புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்கள் மிக எளிமையான வடிவமைப்பு, முன் மற்றும் பின்புறங்களில் சிமெட்ரிக்கல் வளைவுகள் மற்றும் ரெயின்டிராப் கேமரா உள்ளிட்டவற்றை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

புதிய வடிவமைப்பு ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக இருக்கும் என எல்ஜி தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பின்புறத்தின் மேல் இடதுபுறத்தில் மூன்று பிரைமரி கேமரா சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட் அளவுகள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவை பார்க்க ரெயின் டிராப் போன்று காட்சியளிக்கின்றன.



இதுபோன்ற கேமரா அமைப்பை வழங்கும் போது, குறைவான இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனின் பின்புறம் அழகாகவும், ஒட்டுமொத்தமாக மெல்லிய தோற்றத்தையும் வழங்கும் என எல்ஜி தெரிவித்துள்ளது.

எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன் 3டி ஆர்க் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே ஓரங்களில் வளைக்கப்பட்டு இருக்கின்றன. இவை முந்தைய எல்ஜி ஸ்மார்ட்போன்களை விட மிக தத்ரூபமான அனுபவத்தை வழங்குகின்றன. மேலும் இது ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் அனுபவத்தை மென்மையானதாகவும் மாற்றும்.

ஸ்மார்ட்போனின் இதர விவரங்களை எல்ஜி வழங்கவில்லை. எனினும், எல்ஜி புதிதாக பிரீமியம் சாதனம் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது ஃபிளாக்ஷிப் ரக சிறப்பம்சங்கள் மற்றும் 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி சீரிஸ் மாடல்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது. 
Tags:    

Similar News