தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி ஏ21

டாட் நாட்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் பிராசஸருடன் உருவாகும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்

Published On 2020-04-06 08:43 GMT   |   Update On 2020-04-06 08:43 GMT
டாட் நாட்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் பிராசஸருடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமான சாம்சங் பல்வேறு புதிய  மாடல் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை கேலக்ஸி எம் மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ்களில் உருவாகி வருகிறது. அந்த வகையில் சாம்சங் உருவாக்கி வரும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஏ21எஸ் மாடலில் இதுவரை வெளியிடப்படாத எக்சைனோஸ் 850 பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இதில் 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ ஸ்கின் வழங்கப்படுகிறது.



புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A217F எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. மேலும் இதில் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் பிரைமரி கேமராவுடன் 2 எம்பி மேக்ரோ சென்சார் ஒன்றும் வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், வைட் மற்றும் புளூ என நான்குவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் கீக்பென் சோதனையில் கேலக்ஸி ஏ221எஸ் சிங்கிள் கோரில் 183 புள்ளிகளை, மல்டி கோரில் 1075 புள்ளிகளை பெற்று இருக்கிறது.

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ரென்டர்களின்படி இதில் ஆல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, டாட் நாட்ச் டிசைன் மற்றும் கீழ்புறத்தில் தடிமனான பெசல் காணப்படுகிறது. மேலும் புகைப்படங்களை எடுக்க குவாட் கேமரா செட்டப், எல்இடி ஃபிளாஷ் யூனிட் மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News