தொழில்நுட்பம்
கேலக்ஸி நோட் 10 பிளஸ்

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 20 பிளஸ்

Published On 2020-04-03 07:54 GMT   |   Update On 2020-04-03 07:54 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



சாம்சங் நிறுவனத்தின் கேல்கஸி நோட் 20 பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கேலக்ஸி நோட் 20 பிளஸ் மாடல் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-N986U மாடல் நம்பரில் உருவாகி வருகிறது.

இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கேலக்ஸி நோட் 20 பிளஸ் மாடலில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 8 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் 12 ஜி.பி. மற்றும் 16 ஜி.பி. ரேம் வெர்ஷன்களும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 



இந்த ஸ்மார்ட்போனில் கோனா எனும் பெயர் கொண்ட மதர்போர்டு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் சி.பி.யு. ஃபிரீக்வன்சி 3.09 ஜிகாஹெர்ட்ஸ் என கூறப்படுகிறது.

தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி நோட் 20 பிளஸ் அமெரிக்க வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்  SM-N976U எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

கீக்பென்ச் தளத்தில் நடைபெற்ற சோதனையில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 985 புள்ளிகளையும் மல்டி கோரில் 3220 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் நிலையில் இருப்பதால் இதுபற்றிய கூடுதல் விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 
Tags:    

Similar News