தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஐபோன் எஸ்.இ.2 புதிய வெளியீட்டு தேதி

Published On 2020-04-01 09:12 GMT   |   Update On 2020-04-01 09:12 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ.2 மாடல் இந்த தேதியில் தான் வெளியாகும் என புதிய தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



ஐபோன் 9 என்கிற ஐபோன் எஸ்.இ.2 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக இந்த ஆண்டு துவக்கம் முதலே தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்.இ.2 மாடலை ஏப்ரல் 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் ஐபோன் எஸ்.இ.2 மாடலுக்கான கேஸ் புகைப்படங்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. 2016 ஐபோன் எஸ்.இ. போன்றே புதிய ஐபோன் 9 மாடலின் விலையும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் கேஸ் புகைப்படத்தில் அர்பன் ஆர்மர் கியர் பிராண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது.



சிவப்பு நிற கேஸ் மெட்டல் எக்சோ-ஸ்கெலிட்டன் அல்லது லெதர் கேசுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஃபிரேம் போன்று இருக்கும் என கூறப்படுகிறது. கேஸ் வலது புற ஓரத்தில் கேமரா கட்-அவுட் காணப்படுகிறது. இதன் பேக்கேஜிங்கில் புதிய ஐபோன் 4.7 இன்ச், 2020 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதன் ஸ்கிரீன் அளவை வைத்தே இது ஐபோன் 9 என்கிற ஐபோன் எஸ்.இ.2 என கூறப்படுகிறது. ஐபோன் கேஸ் புகைப்படத்தில் மிலிட்டரி ஸ்டாண்டர்டு பிராண்டிங் கொண்டிருக்கிறது. பெஸ்ட் பை மற்றும் இதர முன்னணி விற்பனையாளர்களுக்கு புதிய கேஸ் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களுக்கு ஐபோன் 9 மாடலில் 4.7 இன்ச் எல்.சி.டி. பேனல், டச் ஐடி ஹோம் பட்டன், ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 30,000 வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News