தொழில்நுட்பம்
டாடா ஸ்கை பிராட்பேண்ட்

இலவச லேண்ட்லைன் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வசதியுடன் டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவை

Published On 2020-03-30 08:37 GMT   |   Update On 2020-03-30 08:37 GMT
டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவையில் விரைவில் இலவச லேண்ட்லைன் சேவை மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



டாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் லேண்ட்லைன் சேவை வழங்கப்பட இருக்கிறது. இதனை டாடா ஸ்கை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இதை கொண்டு ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் உடனான போட்டியை பலப்படுத்த முடியும்.

அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு டாடா ஸ்கை நிறுவனம் அன்லிமிட்டெட்ட வாய்ஸ் காலிங் சேவையினை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அன்லிமிட்டெட் அதிவேக டேட்டா வழங்கும் டாடா ஸ்கை பிராட்பேண்ட் சலுகைகளின் விலை மாதம் ரூ. 900 முதல் துவங்குகிறது.

இலவச லேண்ட்லைன் சேவை எவ்வித தகவல்களும் இன்றி டீசர் மட்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கென டாடா ஸ்கை வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில், ‘ஸ்டிரீம் அன்லிமிட்டெட். கால் அன்லிமிட்டெட்’ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதை வைத்து அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவை மற்றும் புதிய லேண்ட்லைன் சேவை வழங்கப்பட இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.



மேலும் புதிய சேவை விரைவில் துவங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் சரியான வெளியீட்டு தேதி இதுவரை குறிப்பிடவில்லை. டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவையில் மொத்தம் மூன்று அன்லிமிட்டெட் சலுகைகள் மாதாந்திர அடிப்படையில் வழங்கப்படுகின்றன. 

இவற்றின் விலை மாதம் ரூ. 900 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 1100 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் அதிகபட்சம் நொடிக்கு 100 எம்.பி. வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. மாதாந்திர சலுகை மட்டுமின்றி, 3, 6 மற்றும் 12 மாதங்களுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

ஏற்கனவே ஏர்டெல், ஜியோ ஃபைபர் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் பிராட்பேண்ட் சேவையுடன் லேண்ட்லைன் சேவையையும் வழங்கி வருகின்றன.
Tags:    

Similar News