தொழில்நுட்பம்
ரியல்மி

கொரோனா வைரஸ் காரணமாக வாரண்டியை நீட்டிக்கும் ரியல்மி இந்தியா

Published On 2020-03-27 08:28 GMT   |   Update On 2020-03-27 08:28 GMT
கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், ரியல்மி சாதனங்களுக்கு வழங்கப்பட்ட வாரண்டி நீட்டிக்கப்படுவதாக ரியல்மி அறிவித்துள்ளது.



ரியல்மி பிராண்டு தனது சாதனங்களுக்கான வாரண்டியை மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. வாரண்டி நீட்டிப்பு மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 வரையிலான காலக்கட்டத்துடன் வாரண்டி நிறைவுறும் ரியல்மி ஸ்மார்ட்போன், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு பொருந்தும்.

இதுதவிர மார்ச் 15 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட சாதனங்களுக்கான வாரண்டியும் 30 நாட்கள் வரை நீட்டிக்கப்படுவதாக ரியல்மி தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் நொய் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ரியல்மி பிராண்டு அறிமுக நிகழ்வுகள் ஏப்ரல் 14 வரை நடைபெறாது என ரியல்மி அறிவித்து இருக்கிறது.



நாட்டில் கொரோனா வைரஸ் நொய் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில், நாடு தழுவிய ஊரடங்கு 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நாடு  முழுக்க பெரும்பாலான சேவைகள் முடங்கி இருக்கின்றன. 

அந்த வரிசையில் ரியல்மி தனது உற்பத்தி ஆலைகளில் பணியாற்றுவோரின் பாதுகாப்பு கருதி பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.

மேலும் ரியல்மி பிராண்டின் நார்சோ சீரிஸ் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது. ரியல்மி பயனர்கள் தங்களது பொருட்களின் வாரண்டி நிலவரத்தை ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
Tags:    

Similar News