சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
வலைதளத்தில் லீக் ஆன கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்
பதிவு: மார்ச் 24, 2020 14:07
சாம்சங்
சம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 5ஜி வேரியண்ட் விரைவில் வெளியாக இருப்பதை புதிய விவரங்கள் தெரியப்படுத்தி இருக்கின்றன. சாம்சங் கேலக்ஸி ஏ71 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளமான TENAA-வில் வெளியாகி இருக்கின்றன. இதில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ71 5ஜி ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. நான்கு பிரைமரி கேமரா, 4370 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 8 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. SM-A7160 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வரும் புதிய ஸ்மார்ட்போன் NSA மற்றும் SA பேண்ட்களை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது.
முன்புறம் 12 எம்.பி. செல்ஃபி கேமரா, ஹோல்-பன்ச் நாட்ச், 4370 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி கேலக்ஸி ஏ71 5ஜி ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் எக்சைனோஸ் 980 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. இதில் 5ஜி மோடெம் இன்டகிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 162.6x75.5x8.1 அளவீடுகளில் 185 கிராம் எடை கொண்டிருக்கும் என TENAA வலைதள விவரங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :