தொழில்நுட்பம்
ரியல்மி 6ஐ டீசர்

48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2020-03-13 13:48 IST   |   Update On 2020-03-13 13:48:00 IST
ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் 48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளன.



ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. குவாட் கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் இதே ஸ்மார்ட்போன் RMX2040 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்பட்டது. மேலும் இதில் நாட்ச் டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர 18 வாட் சார்ஜர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்பட்டது.



இத்துடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், டூயல் சிம் வசதி, வைபை, ப்ளூடூத் 5.0 போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக மியான்மரில் அறிமுகம் செய்யப்படும் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

Similar News