தொழில்நுட்பம்
ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களில் 5ஜி வசதி

Published On 2020-03-11 16:35 IST   |   Update On 2020-03-11 16:35:00 IST
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.



ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்நிறுவன ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.

2016 ஆம் ஆண்டிலேயே 5ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வு பணிகளை ஒன்பிளஸ் துவங்கியதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 5ஜி ஸ்மார்ட்போன்களை வணிக மயமாக்கல் மற்றும் பெருமளவு உற்பத்தியை மேற்கொள்வதில் அதிக அனுபவம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை ஒன்பிளஸ் பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.



முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை காட்சிப்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பின் ஒன்பிளஸ் 7டி ப்ரோ 5ஜி மெக்லாரென் எடிஷன் மாடலை அக்டோபர் மாதத்தில் வெளியிட்டது.

புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களில் குவாட் ஹெச்.டி. பிளஸ் OLED ஃபுளூயிட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என அந்நிறுவனம் உறுதி செய்து விட்டது. ஒன்பிளஸ் 8 சீரிஸ் வெளியீட்டு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

Similar News