தொழில்நுட்பம்
சியோமியின் Mi 10 சீரிஸ் டீசர்

சியோமியின் ஃபிளாக்‌ஷிப் Mi 10 சீரிஸ் சர்வதேச வெளியீட்டு விவரம்

Published On 2020-03-09 17:02 IST   |   Update On 2020-03-09 17:02:00 IST
சியோமி நிறுவனத்தின் Mi 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது ஃபிளாக்‌ஷிப் Mi 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மார்ச் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. வெளியீட்டு விவரங்களை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

பெரும்பாலான நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதால், Mi 10 சீரிஸ் அறிமுக நிகழ்வு ஆன்லைன் நேரலையில் நிகழும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சில நிறுவனங்கள் தங்களது விழாக்களை ரத்து செய்து அவற்றை ஆன்லைனில் நடத்துவதாக அறிவித்து வருகின்றன.



இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் சியோமி நிறுவனம் இரண்டு 5ஜி சாதனங்களை வெளியிடலாம் என கூறப்படுகிறது. இவற்றில் ஃபிளாக்‌ஷிப் தர ஹார்டுவேர் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. புகைப்படங்களுக்கு சான்றளிக்கும் டி.எக்ஸ்.ஒ. பட்டியலில் சியோமி Mi 10 முன்னணி இடத்தை பிடித்ததாக முன்னதாக வெளியான தகவல்களில் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ மாடலும் Mi 10 ப்ரோ மாடலுக்கு இணையான புள்ளிகளை பெற்றது. சியோமி நிறுவனம் Mi 10 சீரிஸ் மாடல்களை ட்விட்டர், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் நேரலை செய்ய இருக்கிறது. இந்திய நேரப்படி இந்த நிகழ்வு இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.

Similar News