தொழில்நுட்பம்
6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் உருவாகும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டது. அந்த வரிசையில் சாம்சங் விரைவில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் ப்ளூடூத் சான்று பெற்ற நிலையில், சமீபத்தில் இதே ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனில் கேலக்ஸி எம்30எஸ் மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, சாம்சங் எக்சைனோஸ் 9611 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. 2.0 வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.