தொழில்நுட்பம்
ஹெச்.எம்.டி. குளோபல் டீசர்

விரைவில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

Published On 2020-03-04 04:10 GMT   |   Update On 2020-03-04 04:27 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மார்ச் 19-ம் தேதி லண்டனில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து செய்யப்பட்டதால், ஹெச்.எம்.டி. குளோபல் புதிய விழாவினை தனியே ஏற்பாடு செய்து இருக்கிறது.

இவ்விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசரினை ஹெச்.எம்.டி. குளோவல் வெளியிட்டு இருந்தது. அதன்படி இதில் செய்ஸ் ஆப்டிக்ஸ், 4K யு.ஹெச்.டி. அல்ட்ரா வைடு வீடியோ சப்போர்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.




இதுதவிர நோக்கியா 1.3, நோக்கியா சி2, நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 400 4ஜி மொபைல் போன் மாடல்களையும் இதே விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா 9 பியூர்வியூ, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 210 ஃபீச்சர் போன் மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News