தொழில்நுட்பம்
16 எம்.பி. பாப் அப் செல்ஃபி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்
இன்ஃபினிக்ஸ் நிறுவனத்த்ன் புதிய எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 6-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
புதிய இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. பாப் அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு மற்றும் டெப்த் சென்சார்கள், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகின்றன.
இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸ் ஒ.எஸ். 6.0 டால்ஃபின் சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்படுகிறது. இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் கிரீன், ரெட் என இரண்டு நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது.
இவைதவிர கூடுதலாக புளூ நிறத்திலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை மற்றும் மற்ற விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.