தொழில்நுட்பம்
டிம் குக்

இந்தியாவில் ஆன்லைன் ஸ்டோர் துவங்கும் ஆப்பிள்

Published On 2020-02-27 11:35 GMT   |   Update On 2020-02-27 11:35 GMT
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விரைவில் சொந்தமாக ஆன்லைன் ஸ்டோர் திறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் ஸ்டோரினை திறக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து 2021 ஆண்டு வாக்கில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களை இந்தியாவில் துவங்க இருக்கிறது.

புதிய தகவல்களை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் அமெரிக்காவில் நடைபெற்ற ஆண்டு பங்குதாரர்கள் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. 



முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களை திறக்க இருப்பது பற்றிய தகவல்களை வெளியிட்டு இருந்தது.

பிராண்டினை எங்களுக்காக மற்றவர்கள் இயக்குவதை நான் விரும்பவில்லை என டிம் குக் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை ஆப்பிள் நிறுவன பொருட்கள் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சில்லறை விற்பனையில் எங்களது பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையிலே செயல்படும் என டிம் குக் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News