தொழில்நுட்பம்
ரியல்மி 6 சீரிஸ் டீசர்

64 எம்.பி. குவாட் கேமராக்கள், 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி

Published On 2020-02-26 11:25 GMT   |   Update On 2020-02-26 11:25 GMT
64 எம்.பி. குவாட் கேமராக்கள், 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ரியல்மி பிராண்டு தனது ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் 5-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.



புதிய ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் ஒற்றை பன்ச் ஹோல், ரியல்மி 6 ப்ரோ மாடலில் டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இதன் ப்ரோ மாடலில் ஒற்றை செல்ஃபி கேமராவுடன், கூடுதலாக வைடு ஆங்கில் லென்ஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. ரியல்மி 6 ப்ரோ மாடலில் 90 ஹெர்ட்ஸ் அல்ட்ரா ஸ்மூத் FHD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க இரு ஸ்மார்ட்போன்களிலும் 64 எம்.பி. ஏ.ஐ. குவாட் கேமராக்கள், ரியல்மி 6 ப்ரோ மாடலில் அல்ட்ரா வைடு லென்ஸ், டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் அல்ட்ரா மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 30 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.



தற்சமயம் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 15-ம் தேதி துவங்குகிறது.
Tags:    

Similar News