தொழில்நுட்பம்
சியோமி Mi சிசி10 ரென்டர்

பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்

Published On 2020-02-22 07:40 GMT   |   Update On 2020-02-22 07:40 GMT
நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.



சியோமி நிறுவனத்தின் Mi சிசி10 ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. புகைப்படங்களை பார்க்கும் போது இவை கான்செப்ட் ரென்டர் போன்று காட்சியளிக்கின்றன. ரென்டர்களில் Mi சிசி10 மற்றும் Mi சிசி10 லைட் பார்க்க ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் லைட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் சில அம்சங்கள் மாற்றப்பட்டு இருக்கும். 

வடிவமைப்பு மற்றும் தரத்தின் அடிப்படையில் முந்தைய ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய Mi சிசி10 சீரிஸ் மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் Mi சிசி10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் Mi ஏ4 மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



சியோமியின் Mi ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. கான்செப்ட்களில் பார்க்க இவைமிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றே தெரிகிறது. Mi சிசி10 மாடலில் பெசல் லெஸ் வடிவமைப்பு, சிறிய பன்ச் ஹோல் கட்-அவுட் காணப்படுகிறது. இதன் பெசல்கள் மிகவும் மெல்லியதாக இருக்கின்றன. 

அந்த வகையில் இதில் AMOLED பேனல் மற்றும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் பெரிய கேமரா மாட்யூல்கள் வழங்கப்படுகின்றன. கேமரா வடிவமைப்பு பார்க்க ஒன்பிளஸ் 7டி சீரிஸ் மாடல்களில் இருப்பதை போன்று காட்சியளிக்கிறது.

தற்சமயம் கான்செப்ட் மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில், இதே வடிவமைப்பை சியோமி தனது Mi ஏ4 மாடலில் வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. முன்னதாக சியோமி வெளியிட்ட Mi ஏ3 ஸ்மார்ட்போன் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்ட விலை குறைந்த ஸ்மார்ட்போனாக விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News