தொழில்நுட்பம்
ஐடெல் விஷன் 1

டூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்மார்ட்போன் ரூ. 5000 விலையில் அறிமுகம்

Published On 2020-02-18 05:08 GMT   |   Update On 2020-02-18 05:08 GMT
டூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஐடெல் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



ஐடெல் நிறுவனம் இந்தியாவில் புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1560 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 0.08 எம்.பி. டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், முன்புறம் 5 எம்.பி. கேமரா, வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. பியூட்டி மோட், போர்டிரெயிட் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 



ஐடெல் விஷன் 1 சிறப்பம்சங்கள்

- 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1560 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர்
- 2 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 8 எம்.பி. பிரைமரி கேரமா
- 0.08 எம்.பி. டெப்த் சென்சார்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

கிரேடியேஷன் புளூ மற்றும் கிரேடியேஷன் பர்ப்பிள் என இரு நிறங்கலில் கிடைக்கும் ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை ரீடெயில் பெட்டியில் ஸ்மார்ட்போனுடன் ரூ. 799 மதிப்புள்ள ப்ளூடூத் ஹெட்போன் வழங்கப்படுகிறது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2200 மதிப்புள்ள கேஷ்பேக், 25 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News