தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் இந்திய விலை அறிவிப்பு

Published On 2020-02-17 04:06 GMT   |   Update On 2020-02-17 04:06 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல்கள் சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே மற்றும் கிளவுட் புளூ நிற வேரியண்ட் விலை ரூ. 66,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே, காஸ்மிக் பிளாக் மற்றும் கிளவுட் புளூ நிற வேரியண்ட் விலை ரூ. 73,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே வேரியண்ட் விலை ரூ. 92,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், இவற்றின் விநியோகம் மார்ச் 6-ம் தேதி முதல் துவங்குகிறது.



அறிமுக சலுகைகள்

கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோர் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனை ரூ. 1999 விலையில் பெற முடியும். இதேபோன்று கேலக்ஸி எஸ்20 மாடலை முன்பதிவு செய்வோர் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனை ரூ. 2999 விலையில் பெறலாம்.

புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து ரூ. 48,100 வரை சலுகை பெற முடியும்.

இந்தியாவில் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் 128 ஜி.பி. வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஹைப்ரிட் சிம் ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் 4ஜி எல்.டி.இ. வெர்ஷன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News