தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா

16 ஜி.பி. ரேம், 108 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2020-02-13 16:50 IST   |   Update On 2020-02-13 16:50:00 IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 16 ஜி.பி. ரேம், 108 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.



சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் 6.97 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெசல்யூஷனுடன் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஸ்னாப்டிராகன் 865 / எக்சைனோஸ் 990 பிராசஸர் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் X55 / எக்சைனோஸ் மோடெம் 5123 வழங்கப்படுகிறது. புதிய கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா மாடலில் அதிகபட்சமாக 16 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0, பிக்ஸ்பி, சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் பே வசதி வழங்கப்பட்டுள்ளன.

புகைப்படங்களை எடுக்க புதிய கேலக்ஸி எஸ்20 அலட்ரா ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 48 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS, 40 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் 8K தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

IP68 தரச்சான்று பெற்று இருக்கும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங், புதிய வயர்லெஸ் பவர்ஷேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.



சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா சிறப்பம்சங்கள்:

- 6.9 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3200x1440 பிக்சல் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 GPU
- ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ARM மாலி-G77MP11 GPU
- 12 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- 16 ஜி.பி. LPDDR5 ரேம், 512 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
- சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்
- 108 எம்.பி. பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF
- 48 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS 24° FoV, f/3.5, PDAF
- 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, டெப்த் விஷன் கேமரா
- 40 எம்.பி. செல்ஃபி கேமரா, 80° வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- ஏ.கே.ஜி. டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA, டூயல் 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. 3.1
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் பவர் ஷேர்

சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிளவுட் கிரே மற்றும் காஸ்மிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.

Similar News