தொழில்நுட்பம்
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா

கொரோனா அச்சுறுத்தலால் ரத்தான 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா

Published On 2020-02-13 10:56 IST   |   Update On 2020-02-13 10:56:00 IST
தொழில்நுட்ப சந்தையில் மிகவும் பிரபலமான சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.



உலக தொழில்நுட்ப சந்தையில் மிகப்பெரும் மொபைல் போன் வர்த்தக விழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னணி தொழில்நுட்ப மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்ததை தொடர்ந்து 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.



2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பார்சிலோனாவில் பிப்ரபரி 24-ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டது. இவ்விழாவில் உலகம் முழுக்க 200 நாடுகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது. பார்சிலோனாவில் 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நான்கு நாட்களுக்கு நடைபெற இருந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிட்டத்தட்ட 40 நிறுவனங்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் கலந்த கொள்ள மாட்டோம் என அறிவித்ததைத் தொடர்ந்து விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு 2020 மொபைல் காங்கிரஸ் விழாவினை ரத்து செய்வதாக அறிவித்தது.

Similar News