தொழில்நுட்பம்
ரூ. 2500 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் ஏ50எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதன் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டு ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை குறைப்பின் படி கேலக்ஸி ஏ50எஸ் ரூ. 2500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,499 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் ரூ. 2000 குறைக்கப்பட்டு ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, புதிய எக்சைனோஸ் 7 சீரிஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.