தொழில்நுட்பம்
ரூ. 4000 பட்ஜெட்டில் 4120 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 19:9 ரக டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகம்
லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 4120 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 19:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
லாவா நிறுவனம் இந்தியாவில் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. லாவா இசட்53 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, யுனாசாக் எஸ்.சி.9832இ குவாட் கோர் பிராசஸர், 1ஜி.பி. ரேம், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கும் லாவா இசட்53 ஸ்மார்ட்போனினை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, குஜராத்தி, உருது, பெங்காலி, மராத்தி என எட்டு இந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் 4120 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
லாவா இசட்53 சிறப்பம்சங்கள்:
- 6.1 இன்ச் 1280x600 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் SC9832E பிராசஸர்
- மாலி 820MP1 GPU
- 1 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- டூயல் சிம்
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- 4120 எம்.ஏ.ஹெச். பேட்டரி
லாவா இசட்53 ஸ்மார்ட்போன் ப்ரிசம் ரோஸ் மற்றும் ப்ரிசம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4829 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.