தொழில்நுட்பம்
ஒன்பிளஸ்

இந்திய சந்தையில் அசத்திய ஒன்பிளஸ்

Published On 2020-02-04 17:11 IST   |   Update On 2020-02-04 17:11:00 IST
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிராண்டு இந்திய சந்தையில் கணிசமான சதவீத பங்குகளை பெற்று இருப்பது சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.



ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை உணர்த்தி வருகிறது.

இந்நிலையில், கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பிரீமியம் பிரிவில் ஒன்பிளஸ் 33 சதவீத புள்ளிகளை பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்தி சந்தையின் பிரீமயம் பிரிவில் ஒன்பிளஸ் முதலிடத்தில் இருக்கிறது.



இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விநியோகம் 2 கோடிகளை கடந்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7டி சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. 

ஒன்பிளஸ் 7 சீரிஸ் மாடல்களை தொடர்ந்து ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ போன்ற மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்  செய்யப்பட இருக்கிறது. 

Similar News