தொழில்நுட்பம்
நோக்கியா ஸ்மார்ட்போன்

விரைவில் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

Published On 2020-02-02 05:15 GMT   |   Update On 2020-02-01 09:13 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படுகிறது.



ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கான நோக்கியா சிறப்பு நிகழ்வு பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளது. 

சிறப்பு நிகழ்வில் புதிய நோக்கியா பிராண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா 8.2 5ஜி, நோக்கியா 5.2, நோக்கியா 1.3 மற்றும் புதிய நோக்கியா ‘ஒரிஜினல்’ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனில் pOLED அல்லது LCD பேனல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.



நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம். இதன் விலை 169 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 13,300) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் டிஸ்ப்ளே, 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி, பின்புறம் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ட்ரி லெவல் மாடலாக அறிமுகமாக இருக்கும் நோக்கியா 1.3 விலை 79 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 6,200) என நிர்ணயம் செய்யப்படலாம்.
Tags:    

Similar News