தொழில்நுட்பம்
இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி ஸ்டைலஸ் ரென்டர்கள்
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவன ஸ்மார்ட்போன் ஒன்றின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி ஸ்டைலஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் சோஃபியா பிளஸ் எனும் குறியீட்டு பெயரில் XT2043 என்ற மாடல் நம்பர் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக எஃப்.சி.சி. வலைதள சான்றுகளில் தெரியவந்துள்ளது. மோட்டோ ஜி8 மற்றும் மோட்டோ ஜி8 பவர் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் சோஃபியா மற்றும் சோஃபியர் எனும் குறியீட்டு பெயர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
எஃப்.சி.சி. வலைதளத்தின் படி புதிய ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்றும் இதில் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், பன்ச் ஹோல் வடிவமைப்பில் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மோட்டோ ஜி8, மோட்டோ ஜி8 பவர் மற்றும் மோட்டோ ஜி8 ஸ்டைலஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம்.