தொழில்நுட்பம்
ஆப்பிள் சி.இ.ஒ. டிம் குக்

இந்தியாவில் ஐபோன் விற்பனை இருமடங்கு உயர்வு

Published On 2020-01-30 03:45 GMT   |   Update On 2020-01-29 11:35 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை இந்திய சந்தையில் இருமடங்கு உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை இந்தியாவில் இருமடங்கு உயர்ந்து இருக்கிறது. இதனை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார்.

‘டிசம்பர் 28, 2019 வரை நிறைவுற்ற காலாண்டு வாக்கில் பிரேசில், சீனா, இந்தியா, தாய்லாந்து மற்றும் துருக்கி போன்ற வளரும் நாடுகளில் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறோம்’ என டிம் குக் தெரிவித்தார். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 8 சதவீதம் வரை அதிகம் ஆகும். 

விற்பனை வளர்ச்சிக்கு ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்கள் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அதிகம் விற்பனையான மாடலாக ஐபோன் 11 இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஐபோன் மாடல்களின் மூலம் கிடைத்த வருவாய் 5600 கோடி டாலர்கள் ஆகும்.



இந்தியாவில் ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR போன்ற மாடல்கள் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன. ஐபோன்கள் தவிர மேக் மற்றும் ஐபேட் மூலம் ஆப்பிள் நிறுவனம் முறையே 720 கோடி டாலர்கள் மற்றும் 600 கோடி டாலர்கள் வருவாய் பெற்றிருக்கிறது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம்பாட் இந்திய விலை அந்நிறுவன வலைதள பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் ஹோம்பாட் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Tags:    

Similar News