தொழில்நுட்பம்
ரிய்லமி சி சீரிஸ் டீசர்

பிப்ரவரியில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2020-01-29 11:24 GMT   |   Update On 2020-01-29 11:24 GMT
ரியல்மி பிராண்டின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



ரியல்மி பிராண்டு இந்தியாவில் சி2 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், புதிய ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போனின் டீசரை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதன்படி இந்தியாவில் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 6-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக வெளியிடப்பட்ட டீசரில் ரியல்மி பிராண்டு சர்வதேச சந்தையில் மொத்தம் 1.02 கோடி சி சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசருடன், புதிய ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார். புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி சி1 மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்களை போன்றே என்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.



சமீபத்தில் RMX1941 எனும் மாடல் நம்பர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகின. தற்சமயம் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி சி3 மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விவரங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

ரிய்லமி சி3 ஸ்மார்ட்போனுடன் ரியல்மி சி3எஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த இயங்குதளம், 4ஜி வசதி, வைபை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News