தொழில்நுட்பம்
போக்கோ எக்ஸ்2 டீசர்

64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் பிப்ரவரியில் வெளியாகும் புதிய போக்கோ ஸ்மார்ட்போன்

Published On 2020-01-28 04:37 GMT   |   Update On 2020-01-28 04:37 GMT
போக்கோ பிராண்டின் புதிய எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



போக்கோ பிராண்டின் எக்ஸ்2 ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் பிப்ரவரி 4-ம் தேதி அறிமுகமாக இருக்கும் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 64 எம்.பி. பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்படுகிறது.



இத்துடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா, பின்புறம் கேமரா சென்சார்களின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படலாம். மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், கீழ்புறம் லவுட்ஸ்பீக்கர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது.



இதுவரை வெளியாகி இருக்கும் டீசர்களில் ஆன்டெனா கட்-அவுட்கள் எங்கும் காணப்படவில்லை என்பதால், போக்கோ எஃப்1 போன்றே இந்த ஸ்மார்ட்போனும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

Tags:    

Similar News