தொழில்நுட்பம்
ஃபேஸ்புக்

வாட்ஸ்அப் வரிசையில் ஃபேஸ்புக்கில் வரும் புதிய அம்சம்

Published On 2020-01-24 11:27 GMT   |   Update On 2020-01-24 11:27 GMT
வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் செயலியிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய அம்சம் வழங்கப்பட இருக்கிறது.



வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோட் அம்சம் சமீபத்தில் அதன் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலிகளில் டார்க் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், ஃபேஸ்புக்கின் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் டார்க் மோட் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஃபேஸ்புக் ஆண்ட்ராய்டு பதிப்பில் டார்க் மோட் வழங்குவது பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தற்சமயம் ஃபேஸ்புக் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் டார்க் மோட் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு டார்க் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கிரீன்ஷாட்களின் படி ஃபேஸ்புக் செயலியில் முழுமையான டார்க் மோடிற்கு பதில் வாட்ஸ்அப் செயலியில் உள்ளதை போன்ற டார்க் மோட் வழங்கப்படும் என தெரிகிறது.



சமீபத்தில் வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு புதிய அப்டேட்டை வெளியிட்டது. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்களை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்டிக்கர் பேக் அனிமேட் ஆகும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

மேலும் ஸ்டிக்கர் பேக் அருகில் பிளே ஐகானும் காணப்படுகிறது. பிளே ஐகான் கொண்டு அனிமேஷன்களை டவுன்லோடு செய்யும் முன் அவற்றை பிளே செய்து பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய அப்டேட்டில் டெலீட் மெசேஜஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பதிப்பில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பதிவு செய்யும் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்த அம்சம் ஐ.ஒ.எஸ். பயனர் ஐகிளவுட் கீசெயின் ஆப்ஷனை தங்களது அக்கவுண்ட்டில் செயல்படுத்தி இருந்தால் மட்டுமே வேலை செய்யும். இதே போன்ற அம்சத்தினை ஆண்ட்ராய்டு தளத்தில் அக்கவுண்ட் டிரான்ஸ்ஃபர் பெயரில் வழங்கி வருகிறது.
Tags:    

Similar News