தொழில்நுட்பம்
ஐபோன் எஸ்.இ.2 ரென்டர்

அடுத்த மாதம் உற்பத்தி துவங்கி மார்ச் மாதத்தில் வெளியாகும் ஐபோன் எஸ்.இ.2

Published On 2020-01-23 04:23 GMT   |   Update On 2020-01-23 04:23 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்.இ.2 உற்பத்தி மற்றும் வெளியீட்டு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போனினை 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஐபோன் எஸ்.இ. பார்க்க ஐபோன் 5எஸ் போன்ற வடிவமைப்பு கொண்டிருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்.இ.2 ஸ்மார்ட்போன் 2020-ம் ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய விலை குறைந்த ஐபோன் உற்பத்தி பிப்ரவரி மாதத்தில் துவங்கி, மார்ச் மாத துவக்கத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

புதிய ஐபோன் 4.7 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, நாட்ச்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 138.5x67.4x7.8 எம்.எம். அளவில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் ஐபோன் எஸ்.இ.2 பார்க்க ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.



மேலும் ஐபோன் எஸ்.இ.2 மாடலில் ஐபன் 8 மாடலில் இருந்த கிளாஸி பிளாக்கிற்கு மாற்றாக ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஐபோனில் டச் ஐ.டி. அம்சம் வழங்கப்படலாம்.

புதிய விலை குறைந்த ஐபோனில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ13 பயோனிக் பிராசஸர், 3 ஜி.பி. ரேம் மற்றும் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஐபோன் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News