தொழில்நுட்பம்
ஆப்பிள்

பெரிய கேமரா சென்சார்கள் மற்றும் மெல்லிய வடிவமைப்புடன் உருவாகும் 2020 ஐபோன்

Published On 2020-01-22 09:35 GMT   |   Update On 2020-01-22 09:35 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் மாடல்களில் பெரிய கேமரா சென்சார்கள் மற்றும் மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் சீரிஸ் மாடல்களுக்கிடையே வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உயர் ரக 6.7 இன்ச் மாடலில் மெல்லிய வடிவமைப்பு மற்றும் பெரிய கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் அறிமுகமாக இருக்கும் 6.1 இன்ச் மற்றும் 5.4 இன்ச் மாடல்களில் வெவ்வேறு கேமரா மாட்யூல்கள் வழங்கப்படலாம். ஆப்பிள் நிறுவனத்திற்கு உபகரணங்களை உற்பத்தி செய்யும் சீன நிறுவன வட்டாரங்களில் இருந்து புதிய விவரங்கள் வெளியானதாக கூறப்படுகிறது. புதிய விவரங்களுடன் ஒற்றுப்போகும் வகையில் மூன்று ஐபோன்களின் முப்பறிமான மாடல்களும் வெளியாகியுள்ளன.



6.7 இன்ச் ஐபோன் 7.4 எம்.எம். மெல்லியதாக இருக்கிறது. இது ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடலை விட 10 சதவீதம் மெல்லியதாகும். மேலும் இது ஐபோன் 11 ப்ரோ மாடலை சற்றே உயரமாகவும் இருக்கும் என தெரிகிறது. இதேபோன்று 5.4 இன்ச் மாடலின் உயரம் ஐபோன் எஸ்.இ. அளவில் இருக்கும் என்றும் 6.10 இன்ச் மாடல் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ரோ மாடல் அளவில் இருக்கிறது.

கேமராவை பொருத்தவரை 5.4 இன்ச் மற்றும் 6.1 இன்ச் மாடல்களில் இரட்டை கேமரா சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 6.1 இன்ச் ஐபோனில் மூன்று பிரைமரி கேமராக்களும், 6.7 இன்ச் மாடலில் மூன்று லென்ஸ்கள், ஐபோன் 11 ப்ரோ மாடலுடன் ஒப்பிடும் போது பெரிய சென்சார்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

நான்கு புதிய ஐபோன்களும் OLED ஸ்கிரீன்களை கொண்டிருக்கும் என்றும் இவற்றில் ஃபேஸ் ஐடி அம்சம் நிச்சயம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

புகைப்படம் நன்றி: macotakara
Tags:    

Similar News