தொழில்நுட்பம்
கேலக்ஸி நோட் 10 லைட்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-01-18 04:42 GMT   |   Update On 2020-01-18 04:42 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 21-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. 

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 1080x2400 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10 மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



சாம்சங்  கேலக்ஸி நோட் 10 லைட் சிறப்பம்சங்கள்:

- 6.7 இன்ச் FHD+ 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர்
- மாலி G72MP18 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR4x ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
- 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, OIS
- 12 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஆரா குளோ, ஆரா பிளாக் மற்றும் ஆரா ரெட் நிறங்களில் கிடைக்கும் என்றும் இந்தியாவில் இதன் விலை ரூ. 35,990 முதல் துவங்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News