தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2020-01-11 06:13 GMT   |   Update On 2020-01-11 06:13 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்களை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 48 எம்.பி. பிரைமரி கேமரா, சூப்பர் ஸ்டெடி OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ப்ரிசம் வைட், ப்ரிசம் பிளாக் மற்றும் ப்ரிசம் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News